மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்: திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

September 20, 2022

திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். திமுகவில் அமைப்பு ரீதியான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அடிப்படை அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர், துணை செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை […]

திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

திமுகவில் அமைப்பு ரீதியான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அடிப்படை அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர், துணை செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலை அமைதியாக போட்டியின்றி நடத்தி முடிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னரே அதிருப்தியாளர்களை அழைத்துப் பேசி சுமூக நிலை உருவாக்க வேண்டும். கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு மிக முக்கியமானது என்பதால், அதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu