திமுக கூட்டணி பங்கீடு - சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

February 29, 2024

நாடாளுமன்ற தொகுதி பங்கீடு சம்பந்தமாக திமுக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தீவிர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

நாடாளுமன்ற தொகுதி பங்கீடு சம்பந்தமாக திமுக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தீவிர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு முன்னதாக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu