வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் -  மல்லிகார்ஜுன கார்கே 

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கார்கே அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் […]

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கார்கே அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu