கடந்த டிசம்பர் மாதத்தில், பயணிகள் வாகன விற்பனை வருடாந்திர அடிப்படையில் 7.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசம்பரில், மொத்தமாக, 235309 பயணிகள் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு மூலம் பெறப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டில், பயணிகள் வாகன விற்பனை 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில், மொத்தமாக, 3.79 மில்லியன் பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், சரக்கு வாகனங்கள் விற்பனை 37% அதிகரித்து, 0.93 மில்லியனாக பதிவாகி உள்ளது. அத்துடன், இருசக்கர வாகனங்கள் விற்பனை 7.4% அதிகரித்து, 15.60 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகன விற்பனையைப் பொறுத்தவரை, கடந்த 2018 ம் ஆண்டு உச்சநிலை பதிவானது. அதன் பின்னர், தற்போது, பயணிகள் வாகன விற்பனையில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.