பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளில் இரு மடங்கு கட்டண வசூல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வண்டிகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கெரை கண்டிப்பான முறையில் ஒட்டி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் காருக்குள் பாஸ்டேக் ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது மட்டும் அதனை கையில் எடுத்துக்காட்டுகின்றதால் நேர […]

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வண்டிகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கெரை கண்டிப்பான முறையில் ஒட்டி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் காருக்குள் பாஸ்டேக் ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது மட்டும் அதனை கையில் எடுத்துக்காட்டுகின்றதால் நேர விரையம் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் முன் பகுதியில் பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu