மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்பு

November 23, 2022

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றுக் கொண்டார். மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 17-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் […]

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 17-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பிமன் பானர்ஜி கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu