தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

November 9, 2022

தமிழகம் முழுதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது. இதற்காக இன்று காலை 10:00 மணிக்கு அனைத்து சட்ட சபை தொகுதிகளிலும் வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம். இம்மாதம் 12, 13, […]

தமிழகம் முழுதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது. இதற்காக இன்று காலை 10:00 மணிக்கு அனைத்து சட்ட சபை தொகுதிகளிலும் வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம். இம்மாதம் 12, 13, 26, 27ம் தேதிகளில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும்.

இம்முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடக்கும். இம்முறை 17 வயதான இளைஞர்களும் இளம்பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu