துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் மெத்வதேவ் மற்றும் சிட்சிபாஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
துபாயில் நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் பெரிகார்டு அணிக்கு எதிராக விளையாடினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.














