துபாயில் 6 மாதத்தில் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு

July 6, 2023

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து துபாய் புள்ளியியல் மையம் கூறுகையில், உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக துபாய் திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. துபாயில் […]

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் புள்ளியியல் மையம் கூறுகையில், உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக துபாய் திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. துபாயில் மக்கள்தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35,50,400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36,03,286 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் துபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89,196 ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, துபாய் நகர்ப்புற திட்டம் 2040-ன் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை மேம்படுத்தவும் வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu