நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று நாட்களாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ள காடுகளாக காட்சியளித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதேபோன்று விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.