அரசாணை வெளியிடாததால் மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு

September 15, 2022

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற அரசாணை வெளியிடாததால் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க சென்றவர்கள் படித்து முடித்த பின் மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில் ஒப்புதல் பெற்று மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களில் 3 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் 10 மாதம் பயிற்சி பெறுவதற்கு […]

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற அரசாணை வெளியிடாததால் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க சென்றவர்கள் படித்து முடித்த பின் மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில் ஒப்புதல் பெற்று மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களில் 3 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் 10 மாதம் பயிற்சி பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. தமிழக அரசு இதை 7 சதவீதமாக உயர்த்தியதால் 436 மாணவர்கள் பயிற்சி பெற உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், மருத்துவ பயிற்சிக்கு மற்ற மாநிலங்களில் பயிற்சி கட்டணம் இல்லை. கட்டண விலக்கை அனுமதித்தால் ரூ.8 கோடி இழப்பீடு ஏற்படும் என்று சொல்லி 2 மாதமாக அமைச்சர் தியாகராஜன் அனுமதி வழங்கவில்லை.

அரசாணை வெளியிடப்படாததால் நாங்கள் பயிற்சிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளோம். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் நன்கொடை கொடுக்க முடியாது என்பதால் தான் வெளிநாட்டில் மருத்துவம் படித்தோம். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு எங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

 
0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu