விநியோக பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் கோதுமை விலை உயர்ந்தது

August 9, 2023

வரத்து குறைவால் இந்தியாவில் கோதுமையின் விலை மிக உயர்ந்துள்ளது. இது பெப்ருவரி மாதத்திற்குப் பிறகான முதல் உயர்வாகும். இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை சராசரியாக ஒரு கிலோ ரூ.37.4க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கோதுமை மற்றும் அரிசி விலைகள் விநியோக பற்றாக்குறை காரணமாக உயர்ந்து வருகின்றன. தற்போதைய மின்-ஏலத்தில், கோதுமை வாங்குபவர்களுக்கு 100 டன் மற்றும் அரிசிக்கு 1,000 டன் என்ற அளவில் வழங்குவதன் மூலம் சில்லறை விலையை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது […]

வரத்து குறைவால் இந்தியாவில் கோதுமையின் விலை மிக உயர்ந்துள்ளது.

இது பெப்ருவரி மாதத்திற்குப் பிறகான முதல் உயர்வாகும். இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை சராசரியாக ஒரு கிலோ ரூ.37.4க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கோதுமை மற்றும் அரிசி விலைகள் விநியோக பற்றாக்குறை காரணமாக உயர்ந்து வருகின்றன. தற்போதைய மின்-ஏலத்தில், கோதுமை வாங்குபவர்களுக்கு 100 டன் மற்றும் அரிசிக்கு 1,000 டன் என்ற அளவில் வழங்குவதன் மூலம் சில்லறை விலையை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 20 அன்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், கோதுமையை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​இந்திய உணவுக் கழகம் 301.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 253.5 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் இருப்பு வைத்துள்ளது. தற்போதைய மின்-ஏலத்தில், கோதுமை வாங்குபவர்களுக்கு 100 டன் மற்றும் அரிசிக்கு 1,000 டன் வழங்குவதன் மூலம் சில்லறை விலை குறைப்பு இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோதுமை பணவீக்கம் வருடாந்தர அடிப்படையில் 12.4% ஆக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu