அந்தமான் தீவில் திடீரென இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய யூனியன் தீவு பகுதியான அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 4:17 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்சேதம்,பொருள் சேதம் எதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.