இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 46 பேர் பலி , 700 பேர் காயம்

November 21, 2022

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 700 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 46 பேர் பலியாகி உள்ளதாகவும் 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக […]

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 700 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 46 பேர் பலியாகி உள்ளதாகவும் 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் உள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu