நேபாளத்தில் நிலநடுக்கம் - டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு

November 9, 2022

நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி மற்றும் மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாள நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ […]

நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி மற்றும் மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாளத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாள நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக டெல்லியில் உள்ள தேசிய சீஸ்மாலஜி மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு 8.42 மணியளவிலும் நேபாளில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 4.9 ரிக்டராக பதிவான நிலையில் பின்னிரவில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu