தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்வீச் தீவில் இன்று காலை 8.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகி, 95 கிலோமீட்டர் ஆழத்தில், 56.29 டிகிரி தெற்கு அச்சரேகை மற்றும் 93.34 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டது. இப்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 470 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவுக்கான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை அல்லது பாதிப்புகளுக்கான தகவல்கள் வெளியாகவில்லை.