அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி வாய்ந்த கற்கள் கர்நாடகாவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் சிக்கப் பள்ளாப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கற்கள் மிகவும் உறுதியானவை. இதுகுறித்து கல் குவாரி ஒப்பந்ததாரர் முனிராஜூ கூறுகையில், சிக்கப்பள்ளாப்பூரில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் நாட்டிலேயே மிகவும் உறுதியானவை. இந்த கற்கள் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி படைத்தவை.
எனவே இவை ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் அஸ்திவாரப் பணிகளுக்கு தேவையான கற்களை விநியோகம் செய்ய 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.













