ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

April 18, 2024

ஜப்பானில் நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கியோஸு மற்றும் சிக்கோகு தீவுகளுக்கு இடையே ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள இக்காடா எரிசக்தி உலை வழக்கம் போல் செயல்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் […]

ஜப்பானில் நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கியோஸு மற்றும் சிக்கோகு தீவுகளுக்கு இடையே ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள இக்காடா எரிசக்தி உலை வழக்கம் போல் செயல்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உவாஜி மாநகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எகிம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu