வேகமாக நகரும் பூமியின் வட துருவம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பூமியின் வட துருவ புள்ளி வேகமாக நகர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தப்புலம் அண்ட வெளியிலிருந்து உந்தப்பட்டு மாற்றமடைகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் துருவப் புள்ளி நகர்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், படிப்படியாக துருவ புள்ளி நகர்ந்து வந்து, வடக்கு மற்றும் தெற்கு துருவ புள்ளிகள் இடம் மாறுகின்றன. கடந்த காலங்களில், பல்வேறு கால அளவுகளில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. சராசரியாக, 3 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவப் புள்ளிகள் இடம் மாறுகின்றன. […]

பூமியின் வட துருவ புள்ளி வேகமாக நகர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் காந்தப்புலம் அண்ட வெளியிலிருந்து உந்தப்பட்டு மாற்றமடைகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் துருவப் புள்ளி நகர்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், படிப்படியாக துருவ புள்ளி நகர்ந்து வந்து, வடக்கு மற்றும் தெற்கு துருவ புள்ளிகள் இடம் மாறுகின்றன. கடந்த காலங்களில், பல்வேறு கால அளவுகளில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. சராசரியாக, 3 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவப் புள்ளிகள் இடம் மாறுகின்றன. வட துருவப் புள்ளியின் படிப்படியான நகர்வு, ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 கிலோமீட்டர் அளவில் இருந்தது. ஆனால், கடந்த 1990க்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 55 கிலோமீட்டர் நகர்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சைபீரியாவை நோக்கி வட துருவ புள்ளி நகர்ந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu