முட்டை விற்பனை அதிகரிப்பால் முட்டையின் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு,பெருந்துறை, கோவை ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளின் மூலம் ஆறு கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 5 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி நடைபெற்று, இவை தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டையின் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்து வருகிறது. ஆறாம் தேதி வரை 460 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று 540 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது அதில் 540 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்