எகிப்து அதிபர் வருகிற 24-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
'குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் 24-ம் தேதி எகிப்து நாட்டு அதிபர் இந்தியா வருகிறார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், வரும் ஜனவரி 26ல் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசிக்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.