சென்னை - அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து

November 4, 2023

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது. இதனால் இன்று மற்றும் நாளை முறையே 8 மற்றும் 58 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர்,பட்டாபிராம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து மூர்மார்கெட் ஆகிய இடங்களுக்கு செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் பயணிகள் வசதிக்காக மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்ல சிறப்பு ரயில் […]

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது. இதனால் இன்று மற்றும் நாளை முறையே 8 மற்றும் 58 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர்,பட்டாபிராம் மற்றும் அரக்கோணத்தில் இருந்து மூர்மார்கெட் ஆகிய இடங்களுக்கு செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் பயணிகள் வசதிக்காக மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்ல சிறப்பு ரயில் இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும்.நாளை அரக்கோணத்தில் இருந்து திருத்தணி, மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து மூர் மார்க்கெட்டுக்கு செல்லும் ரயில்களும், மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராமிலிருந்து மூர் மார்க்கெட்டிற்கு புறப்படும் ரயில்களும் என 58 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக நாளை மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu