பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவடி பணிமணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்களும், பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில்களும், ஆவடி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில், பட்டாபிராமிலிருந்து மூன் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில், பட்டாபிராமிலிருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ஆகியவைகள் ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று நாளையும் சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.