தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் அரக்கோணம் வழிதடத்தில் 84 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் இன்று மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம், அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள், அதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைட் செல்லும் ரயில், அரக்கோணத்தில் இருந்து மூர் மார்க்கெட்டுக்கு வரும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்கில் இருந்து மூர் மார்க்கெட் வரும் ரயில்,ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுபோல நாளை மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி,திருத்தணி, பட்டாபிராம், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்,மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 ரயில்களும் நாளை 84 ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.