மின் இணைப்பு கட்டண உயர்வு – மக்களுக்கு புதிய சுமை!

வீடுகள் கட்டும் நேரத்தில் ஏற்கனவே அதிகரித்த கட்டுமான செலவுகளால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், புதிய மின் இணைப்புக்கான கட்டணங்களும் இருமடங்காக உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் ஒரு முனை மற்றும் மும்முனை மின் இணைப்புகளுக்கான பல்வேறு கட்டணங்கள் ஒருமுறை செலுத்தவேண்டியதாக உள்ளன. ஆனால் இப்போது, அந்த கட்டணங்கள் 3.16% உயர்த்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு முனை மீட்டர் வைப்பு ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.3,095 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், பெயர் […]

வீடுகள் கட்டும் நேரத்தில் ஏற்கனவே அதிகரித்த கட்டுமான செலவுகளால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், புதிய மின் இணைப்புக்கான கட்டணங்களும் இருமடங்காக உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் ஒரு முனை மற்றும் மும்முனை மின் இணைப்புகளுக்கான பல்வேறு கட்டணங்கள் ஒருமுறை செலுத்தவேண்டியதாக உள்ளன. ஆனால் இப்போது, அந்த கட்டணங்கள் 3.16% உயர்த்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு முனை மீட்டர் வைப்பு ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.3,095 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், பெயர் மாற்றம், மீட்டர் மாற்றம் போன்ற பல சேவைகளின் கட்டணமும் தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த பிரிவுகளுக்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வரை ரூ.9,050 இருந்த மொத்த கட்டணம் தற்போது ரூ.17,135-ஆக உயர்ந்துள்ளதோடு, கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகபட்ச சுமையைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu