இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உலகின் முதல் பணக்காரராக, எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்தார். ஆனால், இது நெடு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இரண்டே நாட்களில், மீண்டும் அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால், அவரது சொத்து மதிப்பு சரிந்து, அவர் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று, ப்ளூம்பர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 176 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், அவர் முதலிடத்தில் இருந்த போது, இதைவிட 8 பில்லியன் டாலர்கள் கூடுதலாக அவரது சொத்து மதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 5% க்கும் கீழ் சரிந்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், டெஸ்லா நிறுவனப் பங்குகள் 65% உயர்வை பதிவு செய்திருந்தன. ஆனால், கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட சரிவு, மீண்டும் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.














