பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) 2022ல் உலகளாவிய எண்ணெய் தேவையின் வளர்ச்சி குறையும் என கணித்தது.
அதாவது 2022 இல் எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 2.64 மில்லியன் பீப்பாய்கள் (bpd) அல்லது 2.7 சதவீதம் அதிகரிக்கும் என்று OPEC அக்டோபர் மாத அறிக்கையில் கூறியது. ஆனால் இது முந்தைய முன்னறிவிப்பிலிருந்து 460,000 bpd குறைந்துள்ளது. அதேபோல் 2023 ஆம் ஆண்டில், எண்ணெய் தேவை 2.34 மில்லியன் பீப்பாயகளாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், எண்ணெய் தேவை முன்பு கணிக்கப்பட்டதை விட 360,000 bpd குறைந்துள்ளது. தற்போது மீண்டும் சீனாவில் ஏற்பட்ட கோவிட் பூட்டுதல், மீண்டும் எழுச்சி மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவை காரணமாக எண்ணெய் தேவை 102.02 மில்லியன் bpd ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் OPEC 2022 ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 3.1 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதாவது அதிக பின்னடைவை சந்தித்து வ௫ம் உலகப் பொருளாதாரம் மற்றும் தற்போதைய பணவீக்கம், மத்திய வங்கிகளின் பண இறுக்கம் மற்றும் வட்டி அதிகரிப்பு ஆகியவை காரணமாக 2023 ல் பொ௫ளாதார வளர்ச்சி மேலும் 2.5 சதவீதமாகக் குறைய சாத்தியம் இருப்பதாகக் OPEC அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோல அமெரிக்க எரிசக்தி துறையும் 2023 இல் உலகளாவிய உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான எதிர்பார்ப்புகளை குறைவாக கணித்துள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொ௫ளாதாரத்தடை மற்றும் சீனாவில் நிதி நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர். ஆகியவை உலகின் பொ௫ளாதார வளர்ச்சிக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என OPEC அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.