குறுகிய காலத்தில் அதிக அளவு சொத்து மதிப்பை இழந்ததால் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர், 2000 -ம் வருடத்தில் ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயூசி, அதிக அளவு சொத்து மதிப்பை இழந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். அவர் 58.6 பில்லியன் டாலர்களை இழந்திருந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் 200 மில்லியன் டாலர்கள் வரை சொத்து மதிப்பை இழந்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 320 பில்லியன் டாலர்களாக இருந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, 2023 ஜனவரி மாதத்தில் 137 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து அவரது சொத்து மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.