2500 வெரிபைட் பாலோயர்களை கொண்டவர்களுக்கு பிரீமியம் சேவைகள் - எலான் மஸ்க் அறிவிப்பு

March 28, 2024

எக்ஸ் சமூக தளத்துக்கான புதிய அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2500 க்கும் மேற்பட்ட வெரிஃபைடு ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு பிரீமியம் சேவைகள் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும். மேலும், 5000 வெரிஃபைடு ஃபாலோவியர்களுக்கு மேல் கொண்டவர்களுக்கு பிரீமியம் சேவைகளுடன் பேக்கேஜ் சேவையும் கட்டணம் இன்றி வழங்கப்படும். எக்ஸ் சமூக தளத்தில், விளம்பரம் இல்லா இணைய சேவை, பதிவிடப்பட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதி உள்ளிட்ட பிரீமியம் சேவைகள் உள்ளன. அத்துடன், எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு […]

எக்ஸ் சமூக தளத்துக்கான புதிய அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2500 க்கும் மேற்பட்ட வெரிஃபைடு ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு பிரீமியம் சேவைகள் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும். மேலும், 5000 வெரிஃபைடு ஃபாலோவியர்களுக்கு மேல் கொண்டவர்களுக்கு பிரீமியம் சேவைகளுடன் பேக்கேஜ் சேவையும் கட்டணம் இன்றி வழங்கப்படும்.

எக்ஸ் சமூக தளத்தில், விளம்பரம் இல்லா இணைய சேவை, பதிவிடப்பட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதி உள்ளிட்ட பிரீமியம் சேவைகள் உள்ளன. அத்துடன், எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு சாதனமான க்ரோக் ஏஐ பயன்பாடு கொடுக்கப்படுகிறது. இதற்கு மாதம் 1300 ரூபாய் அல்லது வருடத்திற்கு 13600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து பிரீமியம் சேவைகளையும் உள்ளடக்கிய முறையில், அதிக ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகைகளை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu