உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், இன்று அதிகாலையில் திடீர் சைபர் தாக்குதலை எதிர்கொண்டது. இந்த தாக்குதல், நிறுவனத்தின் முக்கிய சேவைகளான Azure, Outlook மற்றும் Teams ஆகியவற்றை கடுமையாக பாதித்து, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பயனர்களை பாதித்துள்ளது.
சைபர் தாக்குதலின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை மைக்ரோசாப்ட் இன்னும் வெளியிடவில்லை. அதே சமயத்தில், இந்த சைபர் தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்ட சேவைகளை விரைவாக மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சைபர் தாக்குதல், உலகளாவிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பாதுகாப்பு சார்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது.