ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தளத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே, அதற்குப் போட்டியாக, புதிய தளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். அவர், இதற்காக, பிரத்யேக ஆராய்ச்சி குழு அமைத்து, அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முக்கியமாக, ஆல்பாபெட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஐகர் பப்புஸ்கின் என்பவரை இந்தக் குழுவில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது நியமனம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எலான் மஸ்க் அமைத்துள்ள குழுவின் ஆராய்ச்சி பணிகள் தற்போது ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒரு பிரத்தியேக கருவி தயாரிப்பு குறித்த தனி இலக்கு எதுவும் சொல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட் ஜிபிடிக்கு போட்டியாக, கூகுள், மெட்டா, பைது ஆகிய நிறுவனங்கள் களமிறங்கி உள்ள நிலையில், அந்த வரிசையில் எலான் மஸ்க் இணைந்துள்ளார்.