ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, செவ்வாயன்று எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 500 பில்லியன் டாலர்களை எட்டியது. இதுவரை எந்த ஒரு தனி நபரும் இந்த அளவு செல்வத்தை சேர்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, எலான் மஸ்க் புது வரலாறு எழுதியுள்ளார்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக டெஸ்லா நிறுவனம் வளர்ந்ததன் மூலம் மஸ்க்கின் செல்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதோடு, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் (தற்போது எக்ஸ்), நியூராலிங்க், எக்ஸ்ஏஐ மற்றும் தி போரிங் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களிலும் மஸ்க் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளார். குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 350 பில்லியன் டாலராக உள்ளது. இவையே மஸ்க்கின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் ஆகும். மேலும், மஸ்க்கின் புதுமையான திட்டங்கள் அவரது செல்வத்தை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














