எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது கிட்டத்தட்ட உறுதியான செய்தியாகும். ஆனால், அண்மைக்காலமாக நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் இந்திய முதலீட்டை நிறுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதாக கூறப்பட்டது. டெஸ்லா முதலீட்டுக்காக திட்டமிடப்பட்ட அவரது வருகை அதற்குப்பின் நிகழ்த்தப்படவில்லை. அதன்படி, இந்திய முதலீட்டை எலான் மஸ்க் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.