சாட் ஜிபிடி க்கு போட்டியாக எலான் மஸ்கின் 'ட்ரூத் ஜிபிடி' அறிமுகம்

April 18, 2023

சாட் ஜிபிடி யின் வரவு, உலகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி முன் நகர்த்தி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட் ஜிபிடி க்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. தற்போது, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, 'ட்ரூத் ஜிபிடி' என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றை களமிறக்க உள்ளதாக, எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவர் தெரிவித்தார். கடந்த மாதம், […]

சாட் ஜிபிடி யின் வரவு, உலகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி முன் நகர்த்தி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட் ஜிபிடி க்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. தற்போது, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, 'ட்ரூத் ஜிபிடி' என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றை களமிறக்க உள்ளதாக, எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம், X.AI Corp என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை எலான் மஸ்க் பதிவு செய்தார். அதன் ஒற்றை தலைமையாக மஸ்கின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வெளிவரலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதற்காக அமைய வேண்டும். எனவே, ட்ரூத் ஜிபிடி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu