டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவு - எலான் மஸ்கின் பார்ச்சூன் மதிப்பு 200 பில்லியன் டாலர்களுக்கு கீழ் பதிவு

November 9, 2022

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், இன்று, கடந்த ஒரு வருடத்தில் மிகக் குறைந்த அளவை பதிவு செய்துள்ளன. இதனால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட குறைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 195.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்தாலும், அவரே தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக விளங்குகிறார். அவரது நிகர மதிப்பு 74 பில்லியன் டாலர்களாக உள்ளது. எலான் மஸ்க், […]

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், இன்று, கடந்த ஒரு வருடத்தில் மிகக் குறைந்த அளவை பதிவு செய்துள்ளன. இதனால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட குறைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 195.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்தாலும், அவரே தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக விளங்குகிறார். அவரது நிகர மதிப்பு 74 பில்லியன் டாலர்களாக உள்ளது.

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவாக, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன என்று நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதற்கு, மற்ற போட்டி நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளதே காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெஃப் பெசாஸ் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் ஆகியோர் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu