ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய், காரணமாக தமிழ்நாட்டில், விமான நிலையங்களும், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் பரவிய குரங்கம்மை நோய், சுவீடனில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழக சுகாதாரத்துறை, விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது, வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்வது, மற்றும் குரங்கம்மை அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.