ஈரோடு இடைத்தேர்தல்: வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

February 8, 2023

ஈரோடு இடைத்தேர்தலுக்காக வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை […]

ஈரோடு இடைத்தேர்தலுக்காக வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவநாய் ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 24 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu