ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியுள்ளன. 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள் மற்றும் 17 இதர வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.














