டிஸ்னியை தொடர்ந்து இ எஸ் பி என் நிறுவனத்தில் பணி நீக்கம்

April 25, 2023

கடந்த பிப்ரவரி மாதம், டிஸ்னி நிறுவனம், கிட்டத்தட்ட 7000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இ எஸ் பி என் நிறுவனத்தின் உரிமையாளராக டிஸ்னி உள்ளது. இந்நிலையில், இ எஸ் பி என் தலைவர் ஜிம்மி பிடாரோ, ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், “பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு விரைவில் தகவல் அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “டிஸ்னியின் மையமாக நாம் வளர்ந்து வருவதால், பல்வேறு வளர்ச்சி நகர்வுகளை எதிர்நோக்கி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று […]

கடந்த பிப்ரவரி மாதம், டிஸ்னி நிறுவனம், கிட்டத்தட்ட 7000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இ எஸ் பி என் நிறுவனத்தின் உரிமையாளராக டிஸ்னி உள்ளது. இந்நிலையில், இ எஸ் பி என் தலைவர் ஜிம்மி பிடாரோ, ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், “பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு விரைவில் தகவல் அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “டிஸ்னியின் மையமாக நாம் வளர்ந்து வருவதால், பல்வேறு வளர்ச்சி நகர்வுகளை எதிர்நோக்கி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

டிஸ்னியின் முதற்சுற்று பணி நீக்க நடவடிக்கையில் இ எஸ் பி என் இடம்பெறவில்லை. புதிய சுற்றுப் பணி நீக்கத்தில் இ எஸ் பி என் இடம்பெறவுள்ளது. கோடை காலத்தில் பல்வேறு இ எஸ் பி என் ஊழியர்கள் மற்றும் பிரபலங்கள் நீக்கப்படுவர் என கூறப்படுகிறது. முதல் கட்டமாக, நிறுவனத்தின் துணைவேந்தர் மைக் சோல்திஸ், தான் நிறுவனத்திலிருந்து வெளியேற உள்ளதை சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். அவர் கடந்த 43 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu