சூடான்: அதிகாரப் போட்டிக்கான மோதலில் 200 க்கும் மேற்பட்டோர் பலி - ஐரோப்பிய ஒன்றிய தூதர் மீது தாக்குதல்

April 18, 2023

கடந்த 4 நாட்களாக, சூடான் நாட்டில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. அதிகாரப் போட்டிக்காக நடத்தப்படும் இந்த வன்முறையில், இதுவரை 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 1800 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக, அப்பாவி பொதுமக்கள் பலர், தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், அதிகார போட்டி தொடர்பாக நிகழும் இந்த மோதல் […]

கடந்த 4 நாட்களாக, சூடான் நாட்டில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. அதிகாரப் போட்டிக்காக நடத்தப்படும் இந்த வன்முறையில், இதுவரை 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 1800 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக, அப்பாவி பொதுமக்கள் பலர், தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், அதிகார போட்டி தொடர்பாக நிகழும் இந்த மோதல் அதிக நாட்களுக்கு நீடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சூடான் தலைநகர் கார்டூமில், ஐரோப்பிய ஒன்றிய தூதர் நேற்று தாக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த அவரை, ஆயுதம் ஏந்திய நபர்கள் மிரட்டி, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அதைப்போல, அமெரிக்க தூதரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu