யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியுள்ளது.
ஐரோப்பா நாடுகள் இடையே நடைபெறும் ஐரோப்பா கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியின் பரிசு தொகை சுமார் மூன்றாயிரம் கோடி ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் என ஆறு பிரிவுகளாக பிரிந்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்து மோதியது. அதில் ஆரம்பம் முதலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனி 90 நிமிடங்களில் ஐந்து கோல்கள் அடித்தது. இதனால் 5-1 என்ற கோல் கணக்கை வைத்து ஜெர்மனி வெற்றி பெற்றது.