சுமார் 4 வருடங்கள் தாமதத்துக்கு பிறகு ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆன ஆரியான் 6 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஆரியான் 6 ராக்கெட் பிரஞ்சு கயானா பகுதியிலிருந்து ஏவப்பட்டது. இதில் செயற்கைக்கோள்கள் சுமந்து செல்லப்பட்டு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த வெற்றி குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என கூறியுள்ளது. ராக்கெட்டின் இறுதி கட்டத்தில் சிறிய மாறுபாடுகள் ஏற்பட்டாலும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக கூறியுள்ளது. ஆரியான் 6 ராக்கெட் மூலம் பூமியிலிருந்து 36,000 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள்களை நிறுவ முடியும் என்று கூறியுள்ளது.