பில் கட்டண சேவைகளில் வசதிக் கட்டணம் அறிமுகம் - கூகுள் பே அறிவிப்பு

May 16, 2025

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே (Google Pay) தனது பில் கட்டண சேவைகளில் வசதிக் கட்டணத்தை (Convenience fee) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மின்சாரம், எரிவாயு, நீர் போன்ற பயன்பாட்டு கட்டணங்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக செலுத்தும் போது 0.5% முதல் 1% வரையிலான கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக, பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியும் (GST) சேர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் இதுவரை இலவசமாக பணம் பரிமாற்றம் செய்த நிலையில், இந்த புதிய […]

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே (Google Pay) தனது பில் கட்டண சேவைகளில் வசதிக் கட்டணத்தை (Convenience fee) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மின்சாரம், எரிவாயு, நீர் போன்ற பயன்பாட்டு கட்டணங்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக செலுத்தும் போது 0.5% முதல் 1% வரையிலான கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக, பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியும் (GST) சேர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் இதுவரை இலவசமாக பணம் பரிமாற்றம் செய்த நிலையில், இந்த புதிய கட்டணம் சிறிய தொகைக்கான பரிவர்த்தனைகளிலும் கூடுதல் செலவாகலாம். பெரும்பாலான யுபிஐ (UPI) பயன்பாடுகள் இலவச சேவைகளை வழங்கி வந்த நிலையில், செலவுகளை ஈடுசெய்ய இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூகுள் பே மட்டுமல்ல, போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற நிறுவனங்களும் சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பேடிஎம் மொபைல் ரீசார்ஜ் மற்றும் சில யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 முதல் ரூ.40 வரை கட்டணம் விதிக்கிறது. அமேசான் பே (Amazon Pay), பாரத்பே (BharatPe) போன்ற தளங்களும் மெதுவாக இதே போக்கை பின்பற்றுகின்றன. இந்த மாற்றம் நேரடியாக வாடிக்கையாளர்களின் செலவுகளை அதிகரிக்கும் நிலையில், அவர்கள் மாற்று வழிகளை தேடும் வாய்ப்பு அதிகம். வருங்காலத்தில், கூகுள் பே உள்ளிட்ட நிறுவனங்கள் மேலும் எந்த விதமான கட்டணங்களை அறிமுகப்படுத்தும் என்பதையும், இது பயனர்களின் பரிவர்த்தனை பழக்கவழக்கங்களை எவ்வாறு மாற்றும் என்பதையும் கவனிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu