இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு மற்றொரு எம்.பி பிரீத்தி பட்டேல் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி பிரீத்தி பட்டேல் போட்டியிடுகிறார் என்று தகவல் வந்துள்ளது. இவர் முன்னாள் பிரதமர் பிரதமர் ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறுவார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அடுத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ரிஷி சுனக் எதிர்க்கட்சி தலைவராக இருக்க உள்ளார்.