பாகிஸ்தானில் இம்ரான் கானின் சகோதரிகள் கைது

October 5, 2024

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள், அலீமா கான் மற்றும் உஸ்மா கான், கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெளியிட்ட செய்தியில், அமைதியான போராட்டத்திற்கான உரிமையை அனுமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு பாசிச மற்றும் போலியான அரசு எனக் குறிப்பிட்டுள்ளனர். அலீமா மற்றும் உஸ்மா, டி சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டு, செயலக காவல் […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள், அலீமா கான் மற்றும் உஸ்மா கான், கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெளியிட்ட செய்தியில், அமைதியான போராட்டத்திற்கான உரிமையை அனுமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு பாசிச மற்றும் போலியான அரசு எனக் குறிப்பிட்டுள்ளனர். அலீமா மற்றும் உஸ்மா, டி சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டு, செயலக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் 4 நகரங்களில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது நாளை வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu