இஸ்ரேல் ராணுவம் ரபா நகரில் தீவிர தாக்குதலை தொடங்கியதையடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேல் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேல் மீது 20 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லெபனானில் இருந்து 45 ஏவுகணைகள் இஸ்ரேலின் வடக்கு பகுதி நோக்கி ஏவப்பட்டது. இதனை இஸ்ரேல் ராணுவ படை இடைமறித்து தகர்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. அப்போது ஹிஸ்புல்லா ஏவுதலத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் நோக்கி 60க்கும் அதிகமான கட்யூஸா ஏவுகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இதனை நடத்தியதாக ஹிஸ்புல்லா மேலும் கூறியுள்ளது.