சபரிமலையில் இரவு தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையின் தற்போதைய நிலையை தானாக ஆராய்ந்த கேரள உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில், பம்பை - நிலக்கல் தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். தினசரி முன்பதிவு 75 ஆயிரத்தை தாண்டினால், நெய்யபிஷேக நேரத்தில் நடக்கும் அஷ்டாபிஷேகத்தின் எண்ணிக்கையை தந்திரியுடன் ஆலோசித்து குறைக்க வேண்டும். மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவு நடை அடைக்கும் நேரத்தை 11:00ல் இருந்து 11:30க்கு மாற்ற தந்திரி கண்டரருராஜீவரரு அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நேற்றும், நேற்று முன்தினமும் இரவு 11:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.