நியாண்டர்தால் பெண்ணின் எலும்புக்கூட்டை வைத்து முகத்தை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு, 75000 ஆண்டுகள் பழமையான நியாண்டர்தால் மண்டை ஓடு கிடைத்தது. ஈராக்கில் உள்ள குகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடு ஒரு பெண்ணுடையது என சொல்லப்பட்டது. தற்போது, நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரர் எப்படி இருந்திருப்பார் என விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். அதன்படி, அந்த பெண்ணின் முகம் வடிவமைக்கப்பட்டு, புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. முதலில், குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை விஞ்ஞானிகள் ஒன்று சேர்த்தனர். மிகவும் மென்மையாக இருந்த […]

கடந்த 2018 ஆம் ஆண்டு, 75000 ஆண்டுகள் பழமையான நியாண்டர்தால் மண்டை ஓடு கிடைத்தது. ஈராக்கில் உள்ள குகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடு ஒரு பெண்ணுடையது என சொல்லப்பட்டது. தற்போது, நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரர் எப்படி இருந்திருப்பார் என விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். அதன்படி, அந்த பெண்ணின் முகம் வடிவமைக்கப்பட்டு, புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதலில், குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை விஞ்ஞானிகள் ஒன்று சேர்த்தனர். மிகவும் மென்மையாக இருந்த அவற்றை வலுப்படுத்தினர். அதன் பிறகு, மண்டை ஓட்டின் தட்டையான வடிவமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேலியோ ஆர்ட் நிபுணர்கள் மூலம் நியாண்டர்தால் இனத்தை சேர்ந்த பெண்ணின் 3டி முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நியாண்டர்தால் பெண் புகைப்படம் இணையத்தில் வேகமாக கவனம் பெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu