மத்திய அரசு ஊழியர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், அவர்கள் இறந்திருந்தால், தகுதியான பிள்ளைகள் கேட்கலாம். ஆனால், முதல் மனைவி உயிருடன் இருந்தால், இரண்டாவது மனைவியின் உரிமைக்கான பிரச்சனை உருவாகும். இந்த விவகாரம் குறித்து பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. சட்ட அமைச்சகம், இரண்டாவது திருமணம் சட்டபூர்வமானதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. தற்போதைய குடும்ப ஓய்வூதிய விதிகள் 2021-ல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இதில் இறுதி சம்பளத்தின் 30% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் 50% வரை பெறுவர், ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன.