44 பில்லியன் டாலர் டுவிட்டர் ஒப்பந்தம் தொடர்பாக எலோன் மஸ்க் , பெடரல் விசாரணைக்கு உட்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த டுவிட்டர், மஸ்கின் வழக்கறிஞர்களிடம் விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு பல மாதங்களாகக் கோரியதாகவும், ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை என்றும் ௯றியது. ஆதலால் தேவையான ஆவணங்களை வழங்குமாறு மஸ்கின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடுமாறு டுவிட்டர் தரப்பு வக்கீல், நீதிபதியைக் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் பிற்பகுதியில், மஸ்க்கின் வக்கீல்கள் கைப்பற்றிய ஆவணங்களின் தொகுப்பான "பிரிவிலெஜ் லாக்" ஒன்றை நீதிமன்றத்தில் வழங்கினர். அதில் மே 13 மின்னஞ்சலின் வரைவுகள் மற்றும் ஃபெடரல் டிரேட் விளக்கக்காட்சியின் பதிவுகள் குறித்து ஆதாரங்கள் உள்ளதாக டுவிட்டர் ௯றியது. டுவிட்டரின் இந்த கருத்துக்கான கோரிக்கைக்கு மஸ்க்கின் வழக்கறிஞர் உடனடியாக பதிலளிக்கவில்லை. இதற்கு முன் ட்விட்டரின் நீதிமன்ற கோரிக்கை அக்டோபர் 6 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
ட்விட்டர் கையகப்படுத்தல் குறித்து மஸ்க்கின் கருத்துகளை SEC கேட்டது. ஏப்ரலில், SEC மஸ்கிடம் அவரது 9% ட்விட்டர் பங்குகளை வெளியிடுவது தாமதமாகிவிட்டதா என்றும், ஏன் அவர் ஒரு செயலற்ற பங்குதாரராக இருக்க விரும்பினார் என்றும் கேட்டது. பின்னர் மஸ்க் அவர் ஒரு செயல்படும் முதலீட்டாளர் என்பதைக் குறிப்பிட்டார். அதே நாளில் நீதிபதி ட்விட்டர் மற்றும் மஸ்க் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை முடிக்க அனுமதிக்கும் வழக்கை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.